கோவை-மேட்டுப்பாளையம் மின்ரயில் துவக்கம்
மேட்டுப்பாளையம் : வடகோவை-மேட்டுப்பாளையம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று காலை துவங்கி வைக்கப்பட்டது. வடகோவை-மேட்டுப்பாளையம் இடையேயான 32 கி.மீ., தொலைவில் ரூ.28 கோடி செலவில் மின்சார ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் 2 முறை வெள்ளோட்டம் நடைபெற்றது. இவைகள் வெற்றி அடைந்ததை அடுத்து இன்று பயணிகள் மின்சார ரயில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை வரை செல்லும் நீலகிரி ரயில் சேவையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.